ஊழல் வழக்கு தொடர்பில் ஒரு பெண் உள்ளிட்ட 5 அரசு ஊழியர்கள் கைது

ஷா ஆலம்: ஊழல் வழக்குகள் தொடர்பான விசாரணைகளில் உதவுவதற்காக ஒரு பெண் உள்ளிட்ட ஐந்து அரசு ஊழியர்கள் இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) சட்டம் 2009 இன் பிரிவு 17 (a) இன் கீழ் விசாரணை நடத்த வசதியாக 32 முதல் 42 வயதுக்குட்பட்ட அனைவரையும் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் முஹம்மது சயாபிக் சுலைமான் உத்தரவு பிறப்பித்தார்.

2018 முதல் 2020 வரை துப்புரவுப் பணிகளில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்களிடம் இருந்து அரசு ஊழியர்கள் RM3,000 முதல் RM15,000 வரை லஞ்சம் பெற்றதாக சந்தேகிக்கப்படுகிறது. இது ஒரு நகராண்மைக்கழக  வளாகத்தில் ஒப்பந்தப் பணிகளுக்கு கட்டணக் கழிவுகளை விதிக்காமல் இருப்பதற்காக என்று நம்பப்படுகிறது. இதற்கிடையில், சிலாங்கூர் எம்ஏசிசி இயக்குநர் டத்தோ அலியாஸ் சலீமை தொடர்பு கொண்டபோது சந்தேக நபர்கள் அனைவரும் சிலாங்கூர் எம்ஏசிசி அலுவலகத்தில் கைது செய்யப்பட்டதை உறுதி செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here