பனிப்புயலில் சிக்கி விபத்து: ‘அவெஞ்சர்ஸ்’ பட நடிகர் கவலைக்கிடம்

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் வீசி வருகிறது. இந்த பனிப்புயலில் சிக்கி பலர் உயிர் இழந்துள்ளனர். பிரபல ஹாலிவுட் நடிகர் ஜெர்மி ரென்னரும் பனிப்புயலில் சிக்கி இருக்கிறார். இவர் அவெஞ்சர்ஸ், மிஷன் இம்பாசிபிள், மற்றும் கேப்டன் அமெரிக்கா உள்பட பல சூப்பர் ஹீரோ படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

அமெரிக்காவில் ஜெர்மி ரென்னர் வீடு அமைந்துள்ள ரோஸ் கி தஹோ மவுண்ட் பகுதியில் புத்தாண்டில் கடுமையான பனிப்புயல் வீசியது. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். ஜெர்மி ரென்னரும் பனிப்புயலில் சிக்கினார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை மீட்டு விமானத்தில் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.

அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஜெர்மி ரென்னர் ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்றும், ஆனாலும் உடல் நிலை சீராக இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜெர்மி ரென்னர் குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்து வருகிறார்கள். ஜெர்மி ரென்னர் இண்டு முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here