1869 ஆம் ஆண்டு முதல் சேமித்து வைக்கப்பட்ட 150 மில்லியன் ஆவணங்களை இலக்கவியலாக்குகிறது தேசிய பதிவுத்துறை

1869-ஆம் ஆண்டு முதல் சேமித்து வைக்கப்பட்ட 150 மில்லியன் ஆவணங்களை, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நோக்கங்களை கருத்தில் கொண்டு, அவற்றை இலக்கவியல் மயமாக்கும் நடவடிக்கையில் தேசிய பதிவு துறை ஈடுபட்டுள்ளது என்று உள்துறை அமைச்சர், டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

பெரும்பாலான பிறப்பு இறப்பு பதிவுகளில் தந்தை மற்றும் தாய் பெயர், குழந்தையின் பெயர், முகவரி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை தகவல்கள் இருந்தாலும், மலேசியர்கள் பற்றிய தகவல்களின் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

இவ்வாறு இலக்கவியல் முறையில் பதிவு செய்யப்படும் தகவல்கள், குறிப்புகளாக பயன்படுத்தப்பட்டு, எதிர்காலத்தில் தேவைக்கு ஏற்ப தேடலை எளிதாக்கும் வகையில் இந்த இயக்கவியல் மயமாக்கும் செயல்முறை உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுவரை சுமார் 30,000 பதிவுகள் இயக்கவியல் முறையில் சேமிக்கப்பட்டுள்ளன என்றும் இருக்கும் அனைத்து பதிவுகளும் இலக்கவியலுக்கு மற்றி சேமிக்கும் வரை இந்த செயல்முறை தமது துறையால் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here