கூடிய விரைவில் உங்களிடம் பேசுகிறேன் – உடல்நலம் குறித்து விஜய் ஆண்டனி வெளியிட்ட டுவீட்

இயக்குனர் சசி இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்த திரைப்படம் ‘பிச்சைக்காரன்’. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்ற போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டது.

பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது விஜய் ஆண்டனி சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி தன்னுடைய உடல்நலம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், “மலேசியாவில் படப்பிடிப்பின் போது தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட காயத்திலிருந்து நான் குணமடைந்து வருகிறேன். நான் ஒரு பெரிய அறுவை சிகிச்சையை முடித்துள்ளேன். கூடிய விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுகிறேன். உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் என் உடல்நிலை குறித்த அக்கறைக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here