ஆஸ்திரேலியாவில் தேசியக் கொடி ஏந்திய இந்தியர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்

ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் ஆதரவு குழுக்கள், இந்திய தேசிய கொடியை ஏந்தியிருந்த இந்தியர்களை தாக்கியதாக ஆஸ்திரேலிய செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வைலதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் 5 பேர் காயமடைந்ததாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோ வைரலானதையடுத்து பாஜக தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா காலிஸ்தான் ஆதரவாளர்களின் இந்திய விரோத நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் இந்திய விரோத நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த நடவடிக்கைகளால் நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் குற்றவளாகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here