ஏ.எல்.விஜய். தற்போது அருண் விஜய் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டது. இந்நிலையில், இவர் கேரளாவில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் அருண் விஜய் “காயம் ஏற்பட்ட என் முழங்காலுக்கு ஆயுர்வேத முறையில் சிகிச்சை எடுத்து வருகிறேன்..
இது என்னுடைய நான்காவது நாள் சிகிச்சை.. விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்று பதிவிட்டுள்ளார்.