காய்ச்சல் தொற்று அதிகரிப்பு- சீனாவில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த திட்டம்

சீனாவில் முதன்முறையாக கொரோனோ தொற்று கண்டறியப்பட்டு உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்களை காவு வாங்கி விட்டது. தடுப்பூசி, ஊரடங்கு போன்ற நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் வந்தாலும் அது அடுத்தடுத்து உருமாறி இன்னும் இந்த நோயின் தாக்கம் இருந்து கொண்டு தான் உள்ளது.

இந்த சூழ்நிலையில் சீனாவில் மீண்டும் காய்ச்சல் தொற்று அதிகரித்து வருகிறது. தினமும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். நோய் தொற்று வேகமாக பரவ தொடங்கி உள்ளதால் அதனை கட்டுப்படுத்த சீனாவில் பல நகரங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

சீயான் மற்றும் ஷாங்கி நகரங்களில் தான் இதன் வேகம் அதிகமாக உள்ளது. தொடர்ந்து காய்ச்சலால் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஊரடங்கை அமல்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வீடுகளில் இருந்து சிகிச்சை மேற்கொள்ளுமாறு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here