கோலாலம்பூரில் கஞ்சா கலந்த தின்பண்டங்களை விநியோகித்த கல்லூரி மாணவர் கைது

கோலாலம்பூரில் கஞ்சா கலந்த தின்பண்டங்களை (பிரவுனி கேக்) விநியோகித்ததாக நம்பப்படும் 19 வயது கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மார்ச் 25 அன்று மாலை 5 மணியளவில் தலைநகரின் ஜாலான் 9 இல் நடந்த சோதனையைத் தொடர்ந்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் காவல்துறையின் பதில் தலைவர் டத்தோ யஹாயா ஓத்மான் கூறினார்.

சந்தேக நபரிடமிருந்து “சுமார் 21,000 ரிங்கிட் மதிப்புள்ள கஞ்சா அடங்கிய 6 கிலோ பிரவுனி வகை கேக்கை நாங்கள் கைப்பற்றினோம், குறித்த மாணவர் சுமார் மூன்று மாதங்களாக கஞ்சா கலந்த பிரவுனிகளை விற்பனை செய்து வருகிறார் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று, இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 31) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அவர் கூறினார்.

சந்தேகநபருக்கு முந்தைய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை என்றும், சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருளுக்கு எதிர்மறையான பதிலை பெற்றார், மேலும் அவருக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here