ஆஸ்கர் நாயகன் கீரவாணி, கமல் ஹீரோயினுக்கு பத்மஸ்ரீ விருது: குவியும் வாழ்த்து

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர். ஆர். படத்தில் வந்த நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. இசையமைப்பாளர் கீரவாணியும், பாடலாசிரியர் சந்திரபோஸும் விருதை பெற்றுக் கொண்டார்கள்.

இந்நிலையில் கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி இந்திய அரசு கவுரவித்துள்ளது. டெல்லியில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்மஸ்ரீ விருதை கீரவாணிக்கு வழங்கினார்.

நேற்று மாலை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த அந்த விழாவில் கலந்து கொண்டு தன் நண்பர் கீரவாணி விருது பெறுவதை பார்த்து சந்தோஷப்பட்டார் ராஜமவுலி.

குடியரசுத் தலைவர் மாளிகையில் கீரவாணியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, என் அண்ணனை நினைத்து மிகவும் பெருமையாக இருக்கிறது என தெரிவித்துள்ளார் ராஜமவுலி. நேற்றைய விழாவில் கீரவாணிக்கு மட்டும் அல்ல பிரபல பாலிவுட் நடிகையான ரவீணா டாண்டனுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here