பிரான்ஸ்: ஆல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவு – 4 பேர் பரிதாப பலி

ஐரோப்பாவில் உள்ள நீண்ட மலைத் தொடரான, ஆல்ப்ஸ் மலைத் தொடர், உலகின் முக்கியமான சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த மலைத் தொடர், இத்தாலி – பிரான்ஸ் நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளன. இந்த சூழலில் ஆல்ப்ஸ் மலையில் ஈஸ்டர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாவாசிகள் இன்று குவிந்திருந்தனர்.

இந்நிலையில் ஆல்ப்ஸ் மலை தொடரில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தற்போது வரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக பிரான்ஸ் நாட்டு உள்துறை அமைச்சர் ஜெரால்டு டார்மனின் தெரிவித்துள்ளார்.  ஆனால் இறந்தவர்கள் விவரம் குறித்த தகவல்களை அவர் தெரிவிக்கவில்லை.

முன்னதாக பனிச்சரிவு, சாமோனிக்ஸ்க்கு தென்மேற்கே சுமார் 30 கிலோமீட்டர் (கிட்டத்தட்ட 20 மைல்) தொலைவில் உள்ள ஹாட்-சவோயி பகுதியில் உள்ள கான்டமைன்ஸ்-மான்ட்ஜோய் என்ற இடத்தில் உள்ள அர்மான்செட் பனிப்பாறை ஒன்று உருண்டு விழுந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.  உள்ளூர் பிரான்ஸ்-ப்ளூ வானொலி நிலையம் பனிச்சரிவின் அளவை 1,000 மீட்டர் (3,280 அடி) நீளமும் 100 மீட்டர் (328 அடி) அகலமும் கொண்டது என்று தெரிவித்தது. தேடுதலுக்கு உதவ இரண்டு ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here