ஜெர்மனியின் பணவீக்கம் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வாழ்க்கைச் செளவினத்தை சமாளித்துக்கொள்ள முடியாது பெரும்பாலானோர் திண்டாடுகின்றனர்.
ஜெர்மனியின் ரயில் சேவை ஊழியர்களும் நான்கு விமான நிலையங்களின் ஊழியர்களும் கூடுதல் சம்பளம் கேட்டு, நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு ரயில் சேவை முடங்கியதுடன், சம்பந்தப்பட்ட நான்கு விமான நிலையங்களில் ஏறத்தாழ 700 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.





















