நேற்று நாடுமுழுவதும் 1,389 விபத்துகள் பதிவு – புக்கிட் அமான்

நோன்புப் பெருநாள் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட சாலைப் பாதுகாப்பு நடவடிக்கையான ஓப் செலாமாட் 20 இன் இரண்டாவது நாளான நேற்று,புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நாடு முழுவதும் மொத்தம் 1,389 விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த விபத்துக்கள் பல்வேறு வகையான வாகனங்களுடன் தொடர்புடையவை என்று, புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை (JSPT) இன்று முகநூலில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“சாலை விபத்துகளில் சிக்கிய வாகனங்களின் எண்ணிக்கையின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், கார்கள் 1,159, நான்கு சக்கர வாகனங்கள் (112), மற்றும் மோட்டார் சைக்கிள்கள் (192), பல்நோக்கு வாகனங்கள் (81), சைக்கிள்கள் (2), லோரிகள் (15), வேன்கள் (23), பேருந்துகள் (13) மற்றும் நான்கு வாடகைக் கார்கள்” என்பன அடங்குவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விபத்து அபாயத்தைத் தவிர்க்க வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு அனைத்து சாலைப் பயனாளர்களுக்கும் JSPT அறிவுறுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here