மூன்று நாட்கள் சிகிச்சை பலனின்றி விரைவு பேருந்து ஓட்டுநர் மரணம்

கம்போங் சுங்கை இகான் அருகே ஜாலான் கோலா திரெங்கானு-கோத்தா பாருவின் 21.8 ஆவது கிலோமீட்டரில் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளான விரைவு பேருந்து ஓட்டுநர், மருத்துவமனையில் மூன்று நாடுகள் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

பாதிக்கப்பட்ட, நிக் நோர்டின் யூசோப், 51, கம்போங் பூலாவ் மலாக்கா, கோத்தா பாரு,கிளாந்தான் என்ற வசிப்பிடமாகக் கொண்ட அவர், இன்று காலை 4.02 மணிக்கு Sultanah Nur Zahirah மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்ததாக கோலா திரெங்கானு மாவட்ட காவல்துறை துணைத் தலைவர், கண்காணிப்பாளர் வான் முகமட் ஜாக்கி வான் இஸ்மாயில் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் உடல் குடும்பத்திடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னர் மேலதிக நடவடிக்கைகளுக்காக HSNZ தடயவியல் மருத்துவத் துறைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

“தற்போது, ​​மற்றொரு பாதிக்கப்பட்ட பெரோடுவா மைவி பயணி, அதே மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார், இன்னொரு பாதிக்கப்பட்டவர் வெளிநோயாளியாக சிகிச்சை பெறுகிறார்,” என்று அவர் கூறினார்.

திருமணமான தம்பதிகள் பயணித்த கார் விரைவுப் பேருந்துடன் மோதியதில், இருவர் உயிரிழந்ததாக ஊடகங்கள் முன்னர் செய்தி வெளியிட்டிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here