மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் 2 படம் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
இதையடுத்து கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் படத்தை பல்வேறு நகரங்களில் விளம்பரம் செய்து வருகிறார்கள். அந்த நிகழ்ச்சிகளில் மணிரத்னம் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த விளம்பர நிகழ்ச்சியில் மணிரத்னம் கலந்து கொண்டார்.
முதலில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களால் தான் சார் பொன்னியின் செல்வன் படம் சாத்தியமானது. இதை நான் முன்பே கூறயிருக்கிறேன். இருந்தாலும் மீண்டும் கூறுகிறேன். நான் ராஜமவுலிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பாகுபலி படம் மட்டும் இரண்டு பாகங்களில் வரவில்லை என்றால் பொன்னியின் செல்வன் வந்திருக்காது. அதனால் அவருக்கு நன்றி.
நான் ராஜமவுலிக்கு போன் செய்து பேசினேன், அவரை சந்தித்தபோது இதை சொன்னேன். அவர் படத்தால் தான் பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களாக எடுக்க முடிந்தது. வரலாற்று படங்களை எடுக்க மொத்த திரையுலகிற்கும் நம்பிக்கை கொடுத்தார். இந்திய வரலாற்றை படமாக மாற்ற அவர் தான் வழி வகுத்தார் என்றார்.
மணிரத்னம் பேசியது தெலுங்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. அவர்கள் கூறியிருப்பதாவது,
பெருமையாக இருக்கிறது. சக இயக்குநரை பாராட்டிய மணிரத்னம் சாருக்கு நன்றி. உங்களின் பொன்னியின் செல்வன் 2 படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். சக இயக்குநரை இப்படி பாராட்ட பெரிய மனது வேண்டும். அது மணிரத்னம்காருவுக்கு இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.




















