தவறான நடத்தை குறித்த MACC அறிக்கைகளை அரசு நிறுவனங்கள் புறக்கணிக்கின்றன என்கிறார் அசாம்

பெட்டாலிங் ஜெயா: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்த போதிலும், சில அரசு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் தவறான நடத்தை பற்றிய அறிக்கைகளைப் புறக்கணித்து வருகின்றன என்று எம்ஏசிசியின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி கூறுகிறார்.

500 க்கும் மேற்பட்ட முறைகேடுகள் குறித்த அறிக்கைகளை அரசு முகமைகள் பின்தொடருவதற்காக ஊழல் தடுப்பு நிறுவனம் இன்னும் காத்திருப்பதாக எம்ஏசிசி தலைவர் கூறினார். அவற்றில் சில 12 ஆண்டுகளுக்கு முன்பு சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் கூறியதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நாங்கள் (எம்ஏசிசி) தவறான நடத்தையின் கூறுகளைக் கண்டறிந்தால், அதைத் துறைத் தலைவர்களுக்கு (அரசு நிறுவனங்களின்) புகாரளிப்பது எங்கள் கடமை. அந்தத் துறைகளின் தலைவர்கள் எங்களிடம் அறிக்கை செய்வார்கள். அவர்கள் அறிக்கையைப் பெற்றதை உறுதிப்படுத்துவார்கள் என்று ஆசாம் மேற்கோள் காட்டினார். அரசாங்க நிறுவனங்களின் அறிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டவுடன், வழக்குகளை விசாரிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளின் தலைவர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும்.

கிரிமினல் வழக்குகள் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும் அதே வேளையில், தவறான நடத்தை தொடர்பான வழக்குகள் குழுவால் மறுஆய்வு செய்யப்படும். விசாரணையை முடித்த பிறகு, தங்கள் ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கையை முடிவு செய்யும் உரிமையை துறைத் தலைவர்கள் கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக அனைத்து துறைத் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தாலும், பலர் அதை புறக்கணித்து விட்டதாக அசாம் கூறினார். துறைத் தலைவர்கள் சுற்றறிக்கையை மறந்துவிடக் கூடாது. அவர்களில் பலர் அதை புறக்கணித்துள்ளனர். அவர்களுக்கு நினைவூட்டுவதற்காக நாங்கள் கடிதங்களை அனுப்பியுள்ளோம். தலைமைச் செயலாளரின் (அரசுக்கு) சுற்றறிக்கை என்பதால் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது எனது சுற்றறிக்கை அல்ல என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here