KKB கருத்துக்கணிப்பு: பக்காத்தான் வெற்றி பெற்றால் தேர்தல் மனு தாக்கல் செய்வோம் என்கிறது பெரிக்காத்தான்

உலு சிலாங்கூர்:

கோலா குபு பாரு இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றால், தேர்தல் குற்றங்களுக்கான கணிசமான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகக் கூறி, தேர்தல் மனு தாக்கல் செய்வோம் என்று பெரிகாத்தான் நேஷனல் தெரிவித்துள்ளது.

இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்னும் பின்னும் பக்காத்தான் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும், அரசாங்க சலுகைகளை தவறாக பயன்படுத்தியதாகவும் பாஸ் கட்சியின் பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹாசன் கூறினார்.

பக்காத்தான் வெற்றி பெற்றால், நிச்சயமாக தேர்தல் மனு தாக்கல் செய்வோம், கோல திரெங்கானு, கெமாமன் போன்ற இடத்தில் நடந்த முந்தைய வழக்குகளும் எங்களிடம் உள்ளன என்று அவர் கூறினார்.

உலு சிலாங்கூர் நகராண்மை கழகத்திற்கு 5.21 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்வதாக வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவித்ததை அடுத்து, சமீபத்தில் சர்ச்சை ஏற்பட்டது.

எவ்வாறாயினும், இது தேர்தல் குற்றச் சட்டம் 1954ஐ மீறவில்லை, ஏனெனில் வேட்புமனுத் தாக்கல் நாளுக்கு முன்பே ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது, பிரச்சார காலத்தில் அல்ல என்று Nga வலியுறுத்தினார்.

இந்நிலையிலேயே எதிர்க்கட்சி தம்மிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here