28 இலட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியேற்றியது அமெரிக்கா

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு புதிய கொள்கையை வெளியிட்டார். அந்த கொள்கையானது கொரோனா காலத்தில் ஏராளமான புலம்பெயர்ந்தோரை அங்கிருந்து வெளியேற்ற வகை செய்தது. அதன்படி கடந்த 3 ஆண்டுகளில் 28 லட்சத்துக்கும் அதிகமானோரை அமெரிக்கா வெளியேற்றி உள்ளதாக மெக்சிகோ அரசாங்கம் கூறி உள்ளது. இவற்றுள் பெரும்பாலானோர் மெக்சிகோ, கவுதமாலா, எல் சால்வடார் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்றவர்களாவர்.

தற்போது மெக்சிகோவில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளதால் அங்கு கொரோனா அவசர நிலை உத்தரவு நேற்றுடன் காலாவதியானது.

எனவே அமெரிக்காவுக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மெக்சிகோ குடிமக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக அமெரிக்காவில் தூதரக உதவி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவதாக மெக்சிகோ நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here