பனாமாவில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. பனமா- மற்றும் கொலம்பியா எல்லையில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 9 நிமிடங்களில் மீண்டும் அதேபகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவானது. இந்த அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here