நான் இறந்து விட்டேன் என்ற பொய் தகவலை நம்பாதீர்; நடிகர் சுதாகர்

சோசியல் மீடியா வலுப்பெற துவங்கிய காலத்தில் இருந்தே சில விஷமிகள் திரையுலக பிரபலங்கள் குறித்து வதந்திகளை பரப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். குறிப்பாக ஒருவர் உயிருடன் இருக்கும்போதே அவர் இறந்து விட்டதாக வதந்தியை பரப்பி அதனால் சம்பந்தப்பட்ட நபர் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்களிடம் ஆகியோரிடம் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அப்படிப்பட்ட நபர்களின் சமீப இலக்காக மாறியிருப்பவர் நடிகர் சுதாகர்.

தமிழில் கிழக்கே போகும் ரயில் படம் மூலம் பிரபலமான நடிகர் சுதாகர், தெலுங்கிலும் கதாநாயகனாக நடித்து தற்போது குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில் சமீபத்தில் இவர் மரணம் அடைந்து விட்டதாக கூறி சோசியல் மீடியாவில் சில செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் சுதாகர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், “கடந்த சில நாட்களாக என்னை பற்றி வெளியாகும் செய்திகள் எதுவும் உண்மை அல்ல. அதுபோன்ற பொய்யான செய்திகளை நம்பாதீர்கள். மேலும் தயவுசெய்து அதை பரப்பவும் செய்யாதீர்கள். நான் தற்போது ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here