ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னியில் இருந்து சுமார் 180 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிரிட்டா என்ற இடத்தில், நேற்றிரவு பனிமூட்டமான இரவில் திருமண விருந்தினர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 25 பேர் காயமடைந்ததாக இன்று திங்கள்கிழமை ஆஸ்திரேலிய காவல்துறை தெரிவித்துள்ளது.
58 வயதான ஓட்டுநர் கைது செய்யப்பட்டு செஸ்நாக் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று காவல்துறை துணை ஆணையர் டிரேசி சாப்மேன் கூறினார்.
குறித்த விபத்திற்கு வேகம் ஒரு காரணியா என்பதை காவல்துறை விசாரிக்கும் என்றும் அவர் கூறினார்.



















