மஇகா மத்திய செயற்குழுவில் இருந்து சிவராஜ் நீக்கமா?

கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து மஇகா முன்னாள் துணைத் தலைவர் சி சிவராஜ் நீக்கப்பட்டுள்ளார். மஇகா தலைவர் ஒருவர், அநாமதேயமாக இந்த விஷயத்தை  உறுதி செய்தார்.

2021 ஆம் ஆண்டு துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் சிவராஜ் தோல்வியடைந்ததை அடுத்து மஇகா தலைவர் எஸ்ஏ விக்னேஸ்வரனால் மத்திய செயற்குழுவில் நியமிக்கப்பட்டார் என அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய செயற்குழுவில் இருந்து நியமனம் மற்றும் நீக்குதல் ஆகியவை தலைவரின் தனிப்பட்ட உரிமை என்று அவர் கூறினார். சிவராஜ் அடுத்த ஆண்டு கட்சிக்கு தேர்தல் நடக்கும்போது தலைமைப் பதவிக்கு போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதியில் 597 வாக்குகள் பெரும்பான்மையுடன் சிவராஜ் வெற்றி பெற்றார். இருப்பினும், 2018 ஆம் ஆண்டு தேர்தலின் போது ஊழல் செய்ததற்கான ஆதாரங்களைக் காட்டி, அவரது வெற்றியை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சிவராஜ் கடந்த ஆண்டு பொதுத் தேர்தலில் படாங் செராய் தொகுதியில் போட்டியிடத் திட்டமிடப்பட்டார், ஆனால் பக்காத்தான் ஹராப்பான் (PH) வேட்பாளர் எம் கருப்பையா, தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்பே இறந்ததால், அந்த இடத்திற்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

PH மற்றும் பாரிசான் நேசனல் ஆகியவை ஒற்றுமை அரசாங்கத்தில் உறுப்பு கட்சியாக  மாறியதால், இறுதியில் அவர் தனது வேட்புமனுவை வாபஸ் பெறவும் PH வேட்பாளரை ஆதரிக்கவும் ஒப்புக்கொண்டார். இருப்பினும், அத்தொகுதியில் பெரிகாத்தான்  நேனஷல் தொகுதியை வென்றது. சிவராஜ் இந்த ஆண்டு மார்ச் மாதம் செனட்டராக நியமிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here