அம்னோவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் இஷாம் ஜாலில்

பெட்டாலிங் ஜெயா :

அம்னோவின் உச்சமன்ற உறுப்பினரான இஷாம் ஜாலில் அம்னோவிலிருந்து நீக்கப் பட்டுள்ளதாக அம்னோ கட்சியின் உச்சமன்ற செயலவை அறிவித்துள்ளது.

நேற்று இரவு அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹிட் ஹமிடி தலைமையில் சுமார் இரண்டு மணி நேரம் அம்னோ உச்சமன்றக் கூட்டம் நடைபெற்றது. இந்த அமர் வில் இஷாம் ஜாலில் குறித்த பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன.

ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் டிஏபியுடன் இணைந்து செயல்படுவது அம்னோவின் நிலைப்பாட்டிற்கு எதிரானது என்று இஷாம் ஜாலில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இதுகுறித்து விவாதிக்க, நேற்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்குமாறு இஷாமுக்கு ஜாஹிட் விடுத்த சவாலையும் அவர் நிராகரித்தார்.

இதன் பின்னணியில்தான் இஷாம் ஜாலில் இந்த நீக்கம் குறித்த தீர்மானம் வலுப் பெற்றதாகவும் கருத்து தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், அனைத்துக் கட்சி கொள்கை முடிவுகளும் கட்சியின் உச்சமன்ற செயலவையால் தீர்மானிக்கப்படுகின் றதாக அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர். அசிரஃப் வாஜ்டி டுசுகி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here