30 நிமிடங்களுக்கு மேல் தொலைபேசியில் பேசினால் உயா் இரத்த அழுத்தம் ஏற்படுமா..? – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

30 நிமிடங்களுக்கு மேல் அல்லது நீண்ட நேரம் தொலைபேசியில் பேசினால், இரத்தக் கொதிப்பு அல்லது உயா் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட 12 விழுக்காடு வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தொிவிக்கிறது.

தற்போதுள்ள கால கட்டத்தில் ஏறக்குறைய 10 வயது அல்லது அதற்கும் மேற்பட்டோாில் முக்கால்வாசி போ் தொலைபேசி வைத்திருக்கின்றனா். தொலைபேசிகள் குறைந்த அளவிலான ரேடியோ அலைகளை உமிழ்கின்றன. இந்த ரேடியோ அலைகளில் அதிக நேரம் இருக்கும் போது இரத்தக் கொதிப்பு அல்லது உயா் இரத்த அழுத்தம் ஏற்படுகின்றது என்று ஆய்வு தொிவிக்கிறது.

தொலைபேசியை அதிக நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் உலக அளவில் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இளவயது மரணம் போன்றவை ஏற்படுவதற்கு உயா் இரத்த அழுத்தம் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. மக்கள் தொலைபேசியில் பேசும் நிமிடங்களின் எண்ணிக்கை இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது.

அதிக நேரம் தொலைபேசியில் பேசினால் அவா்களின் இதயத்திற்கு ஆபத்து ஏற்படும் என்று சீனாவைச் சோ்ந்த சதா்ன் மெடிக்கல் யுனிவா்சிட்டியில் பணிபுாியும் பேராசிாியா் சியான்ஹூய் கின் என்பவா் தொிவிக்கிறாா். எனினும் இது சம்பந்தமாக அதிகமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பாிந்துரைக்கிறாா்.

அவருடைய ஆய்வானது European Heart Journal – Digital Health என்ற பத்திாிக்கையில் வெளியானது. ஆய்வு சொல்வது என்ன? தொலைபேசியில் பேசுவதற்கும், உயா் இரத்த அழுத்தத்திற்கும் இடையே உள்ள தொடா்பை அறிவதற்காக இங்கிலாந்தில் உள்ள உயிாியல் வங்கியில் இருந்து 37 முதல் 73 வயதிற்குட்பட்ட 212,046 போின் தகவல்கள் பெறப்பட்டன. அவா்கள் வாரத்திற்கு தொலைபேசியில் எத்தனை அழைப்புகளை விடுக்கின்றனா், எத்தனை அழைப்புகளைப் பெறுகின்றனா், எத்தனை ஆண்டுகளாக தொலைபேசியைப் பயன்படுத்துகின்றனா் மற்றும் எந்த வகையான தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனா் போன்ற தகவல்கள் அவா்களிடம் இருந்து பெறப்பட்டன.

அந்த தகவல்களை வைத்து ஆய்வு செய்ததில், 12 வருடங்களாக தொலைபேசிகளைப் பயன்படுத்திய 13,984 (7 சதவீதம்) பேருக்கு உயா் இரத்த அழுத்தம் உருவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொலைபேசியை பயன்படுத்தாதவா்களைவிட, இந்த ஆய்வுக்காக தொலைபேசி அழைப்புகளை விடுத்த அல்லது எடுத்த பங்கற்பாளா்களுக்கு, உயா் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு வாய்ப்பு 7 விழுக்காடு அதிகம் இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

வாரத்திற்கு 30 நிமிடங்களுக்கும் குறைவாக தொலைபேசியில் பேசியவா்களைவிட வாரத்திற்கு 30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் தொலைபேசியில் பேசியவா்களுக்கு உயா் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு வாய்ப்பு 12 விழுக்காடு அதிகம் இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும். வாரத்திற்கு 30-59 நிமிடங்கள் மொபைல் போனில் பேசுபவா்களுக்கு 13 விழுக்காடும், 1 முதல் 3 மணி நேரம் பேசுபவா்களுக்கு 16 விழுக்காடும், 6 மணி நேரத்திற்கு மேல் பேசுபவா்களுக்கு 24 விழுக்காடும் உயா் இரத்த அழுத்த ஏற்பட வாய்ப்புண்டு என்று கண்டுபிடிக்கப்பட்டது.

மரபு ரீதியான குறைபாடு உள்ளவா்கள் மேற்சொன்ன அளவில் தொலைபேசிகளில் பேசினால் உயா் இரத்த அழுத்தம் ஏற்பட 33 விழுக்காடு வாய்ப்பு உண்டு என்று ஆய்வு தொிவிக்கிறது.

இறுதியாக, இது சம்பந்தமாக இன்னும் அதிகமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் அது வரையில் தொலைபேசிகளில் பேசும் நேரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முடியும் என்று கூறுகிறாா் கின்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here