“கோழியில் இருந்து முட்டை வந்ததா.. முட்டையில் இருந்து கோழி வந்ததா?”கடைசியில் பதிலை சொன்ன ஆய்வாளர்கள்

வாஷிங்டன்: பல நூறு ஆண்டுகளாக பெரும் புதிராக இருந்த கோழியில் இருந்து முட்டை வந்ததா.. இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்ற கேள்விக்கான விடையை ஆய்வாளர்கள் ஒரு வழியாகக் கண்டுபிடித்துவிட்டனர்.

நாம் வாழும் இந்த பூமியில் பல மர்மங்கள் புதைந்து இருக்கிறது. அறிவியல் வளர்ச்சி என்பது பல மர்மங்கள், புதிர்களுக்கு விடை கொடுத்துள்ளது. கடந்த காலங்களில் மர்மமாக இருந்த பல விஷயங்களுக்கு அறிவியல் மட்டுமே துல்லியமான பதிலைக் கொடுத்துள்ளது.

அதன்படி பல ஆண்டுகளாக இருக்கும் பெரிய புதிர்களில் ஒன்று கோழியில் இருந்து முட்டை வந்ததா.. இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்பதாகும். இந்த புதிருக்கான விடையை ஆய்வாளர்கள் நெருங்கியுள்ளனர்.

பில்லியன் டாலர் கேள்வி: கோழியில் இருந்து முட்டை வந்ததா.. இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்பது பல ஆண்டுகளாகப் புதிராகவே இருக்கும் ஒரு கேள்வி.. இதற்கிடையே தவளைகள் மற்றும் பல்லிகளை வைத்து நடத்திய ஆய்வில் இதற்கான முடிவை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.

அதாவது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஊர்வன, பறவை இனங்கள் முட்டையிடுவதற்குப் பதிலாக நேரடியாகக் குட்டி போட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

மொத்தம் 51 புதைபடிமங்கள் மற்றும் 29 உயிரினங்களை ஆய்வு செய்ததில் இதைக் கண்டுபிடித்துள்ளனர். முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் oviparous விலங்குகள், குட்டி போட்டுப் பாலூட்டும் viviparous விலங்குகள் என இரு வகை விலங்குகளையும் இந்த ஆய்வில் உட்படுத்தியுள்ளனர். இந்த முடிவுகள் நேச்சர் எக்காலஜி & எவல்யூஷன் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

அதில், “இப்போது முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் விலங்குகளின் பண்டைய புதைவ படிவங்களை ஆய்வு செய்ததில் அப்போது EER என்ற முறையை இனப்பெருக்கத்திற்கான முறையாக இருந்தது தெரிய வந்தது” என்று கூறப்பட்டுள்ளது. இந்த EER என்பது தாய் தனது கருவை அதிக காலத்திற்குத் தக்க வைத்துக் கொள்வதையே குறிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here