பொதுப் போக்குவரத்துக்கள், மருத்துவமனைகளில் இனி முகக்கவசம் கட்டாயமில்லை

வரும் ஜூலை 5 முதல் பொது போக்குவரத்து வாகனங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இனி முகக்கவசத்தை அணிவது கட்டாயமில்லை என்று சுகாதார அமைச்சர், டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கோவிட் -19 தொற்றுக்குள்ளானவர்கள், மூத்த குடிமக்கள், குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் மற்றும் நெரிசலான பகுதிகளில் இருக்கும் கர்ப்பிணித் தாய்மார்கள் போன்ற அதிக ஆபத்துள்ள நபர்கள் முகக்கவசத்தை அணியவதற்கு இன்னும் ஊக்குவிக்கப்படுகின்றனர்,” என்று அவர் இன்று வியாழக்கிழமை (ஜூன் 29) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here