சிங்கப்பூரில் கடந்த 22 வருடம் இல்லாத அளவிற்கு தற்கொலைகள் அதிகரிப்பு

உலகின் சுத்தமான நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இல்லாத வகையில், தற்கொலை செய்து கொள்வோரின் விகிதம் சென்ற ஆண்டு 26% அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டின் தற்கொலை தடுப்பு அமைப்பான சமாரிட்டன்ஸ் ஆஃப் சிங்கப்பூர் (Samaritans of Singapore) 2022-ம் ஆண்டில் அங்கு 476 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அதற்கு முந்தைய வருட எண்ணிக்கையான 378-ஐ விட இது அதிகம் என்றும் தெரிவிக்கிறது.

மேலும் கவலையளிக்கும் விதமாக, இந்த பட்டியலில் 10-29 மற்றும் 70-79 வயதுடையோர் அதிகம் இருப்பதாக அது தெரிவிக்கிறது.

இதையும் படியுங்கள்: செவ்வாய் இந்த அமைப்பின் தலைவர் கேஸ்பர் டேன் கூறுகையில், “தற்கொலை என்பது மனநலம் தொடர்பான சவால்கள், சமூக அழுத்தங்கள், மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சிக்கலான பிரச்சினை” என கூறியிருக்கிறார்.
இந்நிலையில் மனநல ஆலோசகர் ஜாரெட் நெக் இது குறித்து கூறும்போது, “இளைஞர்களும், வயதானவர்களும் மிகவும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதையே இது காட்டுகிறது. சமூகத்தால் புறம் தள்ளப்படுவதும், தனிமைப்படுத்தப்படுதலுமே இதற்கு முக்கிய காரணம். இதற்கு தீர்வு காண்பது மிக அவசியம்,” என்று கூறினார்.

அத்தோடு உலகிலேயே கருவுறுதல், குழந்தை பிறப்பு சதவிகிதம் என்பன குறைவாக உள்ள நாடுகளில், சிங்கப்பூரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார அமைப்பின்படி, தினசரி 7 லட்சம் பேருக்கு மேல் ஒவ்வொரு வருடமும் உலகில் தற்கொலை செய்து கொள்வதாகவும், 15-29 வயதுப்பிரிவில் இறப்போரில் தற்கொலையே 4-வது காரணமாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here