என் அரசியல் பயணம் தொடரும்  – பேராசிரியர்  இராமசாமி திட்டவட்டம்

ஆர்.கிருஷ்ணன்

ஈப்போ, ஜூலை3- 

என் அரசியல் வாழ்க்கைப் பயணம் மீண்டும் சிறப்பாக தொடரும்.  வரும் பினாங்கு மாநில தேர்தலில் எத்தகைய முடிவு எடுக்கப்பட்டாலும் நலன் காக்க என் குரல் ஓங்கி ஒலிக்கும். இந்தியர் உரிமைகளுக்காகப் போராடும் என் போராட்டத்திற்கு ஓய்வில்லை என்று மலேசிய தமிழர் குரல் இயக்கத்தின் 8ஆம் ஆண்டுக்கூட்டத்தை தொடக்கி வைத்தபோது பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ப. இராமசாமி கூறினார்.

    6 மாநிலங்களில் தேர்தல்கள் வரும் ஆகஸ்டு மாதத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தலில் நான் மீண்டும் பினாங்கு மாநில வேட்பாளராக நியமனம் செய்யப்படுவது குறித்து ஜ.செ.க.  தலைமைத்துவம் முடிவு செய்யும். ஆகையால், என் நிலைப்பாடு குறித்த வதந்திகளை ஒரு போதும் நம்பவேண்டாம். கட்சியின் தலைமைத்துவம் விவேகமான, சிறப்பான முறையில் நேர்த்தியுடன் செயல்படும் என்பதை தாம் உறுதியாக நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

     இந்த 6 மாநிலங்கள் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சிறப்பான வெற்றியை பினாங்கு மாநிலத்தில் பெறும். அதனைத் தொடர்ந்து, நெகிரி செம்பிலான், சிலாங்கூர் மாநிலங்களை மீண்டும் வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இருப்பினும், சற்று கடினமான சூழலை எதிர்நோக்க வேண்டிய நிலைப்பாடு உருவாகலாம் என்று அவர் கருத்துரைத்தார்.

    எது எப்படி இருப்பினும், இம்முறை பக்காத்தான் ஹராப்பான் கெடா மாநிலத்தை கைப்பற்றக் கடுமையாக உழைக்கும். இந்த மாநிலத்தில் வெற்றிப் பெறுவது சற்று கடினமாக இருந்தாலும், முழுக் கவனத்துடன் அதிகமான உழைப்பை வழங்கினால் பக்காத்தான் ஹராப்பான் இங்கு வெற்றி பெற முடியும். இம்மாநில வெற்றிக்கு பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவம் சிறப்பான விவேகமான திட்டங்களை வரையறுத்துச் செயல்பட்டால் வாக்காளர்களின் நன்மதிப்பும் ஆதரவும் கிட்டும் என்று அவர் உறுதியுடன் கூறினார்.

    இத்தேர்தலில் கிளந்தான், திரெங்கானு ஆகிய இரு மாநிலங்களில் வெற்றி வாய்ப்பு பக்காத்தான் ஹராப்பானுக்கு  ங்ாதகமாக இல்லாவிட்டாலும் ஏற்பட்டாலும், ஒரு சில தொகுதிகளில் வெற்றி பெற முடியும். அதே ங்மயத்தில், இந்திய வாக்காளர்கள் விவேகமான முறையில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் நன்மை கிடைக்கும் என்று நன்கு உணர்ந்து வாக்களிக்க வேண்டும். தற்போது இந்தியர்கள் இந்நாட்டில் 60 தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யக்கூடியவர்களாக இருந்து வருகின்றனர் என்பதை பேராசிரியர்  இராமங்ாமி நினைவுறுத்தினார்.

   தற்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்நாட்டில் ஊழலை ஒழிக்கவேண்டும் என்பதில் வெகு உறுதியாக செயல்பட்டு வருகின்றார். ஊழல் விவகாரம் குறித்து தெளிவாகவும் தைரியமாக பேசும் முதல் பிரதமர் இவர் தான். இந்த ஊழல் ஒழிப்பு விவகாரத்தில் நேர்த்தியான நடவடிக்கைகள் மேற்கொண்டு அமலாக்கம் செய்யப்படவேண்டும். ஊழல் விவகாரம் குறித்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தவறினால் காலப்போக்கில் இந்நாடு அழிவை தேடிச் செல்லும் நிலைப்பாடு உருவாகிவிடும் என்று அவர் வருத்தமாக தெரிவித்தார்.

     மித்ரா விவகாரத்தில் அதன் செயல்பாடுகளில் சிறிது மாற்றத்தை கொண்டு வர அதன் நிர்வாகத்தினர் முனைப்பு காட்டுவது அவசியமாகும். குறிப்பாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரடியாக சந்தித்து உதவிகள் வழங்க கோரிக் கை மனு வைப்பதாக அவர் கூறினார். 

வசதி குறைந்த மாணவர்களை அடையாளம் கண்டு நேரடியாக உதவிகள் வழங்குவது சிறந்த நடைமுறையாகும். இத்திட்டத்தை அனைத்து மக்களுக்கும் துறையை சார்ந்தவர்களுக்கு பயன்படுத்தினால் மேலும் சிறப்பாகும். இயக்கங்கள் அல்லது சங்கங்கள் வாயிலாக மக்களுக்கு உதவிகள் முறையாக சென்றடையவில்லை. ஆகையால், இயக்கங்களை பயன்படுத்தி செயல்படுவதால் பல முறைகேடுகள் நடந்தேறி வருவதாக புகார்கள் கிடைத்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.            

    இந்நிகழ்வில், மலேசிய தமிழர்கள் குரல் இயக்க ஆலோசகர் டேவிட் மார்ஷல், இந்த இயக்கத்தின் நிர்வாகத்தினர், உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here