உலகின் மிக நீண்ட முத்தப் போட்டி நிறுத்தம்…கின்னஸ் அமைப்பு அதிரடி

­உலகில் பலராலும் செய்ய முடியாத ஒன்றை யாராவது சாதித்து விட்டால் அவர்களை சாதனையாளர்கள் எனக் கொண்டாடுகிறது உலகம்.

அப்படி சாதனை செய்யும் நபர்களை ஊக்குவித்து வருகிறது கின்னஸ் அமைப்பு. இவ்வாறு தனி நபராகவோ, குழுவாகவோ உலகம் முழுவதும் பல்வேறு வகையான சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

ஏற்கனவே படைக்கப்பட்ட சாதனையை முறியடிக்கும் வாய்ப்பையும் கின்னஸ் அமைப்பு வழங்கி வருகிறது. அப்படி பலரும் ஏற்கனவே படைக்கப்பட்ட சாதனைகளை முறியடித்து சாதனை படைத்து வருகின்றனர்.

அப்படித்தான் உலகின் மிக நீண்ட முத்தமும் சாதனையாக்கப்பட்டிருக்கிறது. இந்த உலகின் மிக நீண்ட முத்ததிற்கான போட்டிகள் கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்றது.

இதில் பங்கேற்ற தாய்லாந்தை சேர்ந்த ஏக்கச்சாய் லக்‌ஷனா திரானரத் தம்பதியினர் சுமார் 58 மணி நேரம் முத்தமிட்டு உலக சாதனையை படைத்தனர் . இதுவே தற்போது வரை, சுமார் 9 ஆண்டுகளாக மிக நீண்ட முத்தமாக இருக்கிறது.

இதுவே உலகின் மிக நீண்ட முத்தமாக இருக்கும் என கின்னஸ் உலக சாதனைகள் அமைப்பு கூறியுள்ளது.ஆனால் தற்போது இந்த பிரிவில் எந்த போட்டிகளும் நடைபெறாது என்று கின்னஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here