புத்தாக்க கல்வி ஒத்துழைப்பு டி.எக்ஸ்.என்-சைபர்ஜெயா பல்கலைக்கழகம் கைகோப்பு.

தியாகராஜன், ரீத்தனா

சைபர்ஜெயா:

மலேசியாவில் தளமையாகத்தைக் கொண்டிருக்கும் டி.எக்ஸ்.என் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (DXN HOLDINGS BERHAD) சைபர்ஜெயா பல்கலைக்கழகத்துடன் (UoC) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்துயிட்டது.

1991-ஆம் ஆண்டு நிறுவப்பட  டி.எக்ஸ்.என் புத்தாக்க கல்வி, ஆராய்ச்சித் துறையில் புதிய உருமாற்றத்தைக் கொண்டு வருவதில் முனைப்புக் கட்டி இருக்கிறது. திறன்மிக்க கல்வி, புத்தாக்கக் கல்வி போன்றவற்றில் அதீத கவனம் செலுத்துதுவதற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்யும் என்று அதன் நிருவரும் தலைவரும் ஆனா டத்தோ லிம் சியோ ஜீன் கூறினார்.

ஆரோக்கியம் தொடர்பான பல்வேறு உணவுப் பொருட்களையும் பானங்களையும் தயாரித்து உலக அளவில் பெயர் பதித்தி வரும் ஒரு நிறுவனமாக டி.எக்ஸ்.என் விளக்குகிறது. கானோ டெர்மாலுஸிடம் காலனில் இருந்து இந்த உணவுப் பொருட்கள் பானம் வகைகள் தயாரிக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் 15.9 மில்லியன் உறுப்பினர்களை இந்நிறுவனம் கொண்டிருக்கிறது.

சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை மலேசியாவில் செயல்படும் வெற்றிகரமான பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக அங்கீகாரம் பெற்றுயிருக்கிறது. கியூ.எஸ். பட்டியல் 5 நட்சத்திர அங்கீகாரத்தை அது பெற்றுயிருக்கிறது. கல்வி போதனை, வேலை வாய்ப்பு, கல்வி மேம்பாடு, அனைத்துலக மைய புத்தாக்கம, வசதிகள், சமூகப் பொறுப்புடமைகள் போன்றவற்றில் இப்பல்கழைகலகம் பிரபலம் அடைந்திருக்கிறது என்று டத்தோ லிம் சியோ கூறினார்.

புத்தாக்கம், கல்வி ஆகியவற்றில் ஒரு புதிய உருமாற்றத்திற்கு DXN-UoC கரம் கோத்திருப்பது ஒரு புதிய வரலாறு என்று டத்தோ லிம் சியோ ஜீன் பெருமிதம் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here