பள்ளிகள் திறக்கும் முன் கோவிட் தொற்று மாணவர்களுக்கு பரவாமல் இருக்க எவ்வாறு கையாள்வது? விளக்கம் தேவை

செப்டம்பர் மாதம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னதாக கோவிட் -19 தொற்று  மாணவர்களுக்கு பரவாமல் இருக்க எவ்வாறு கையாள்வது என்பதை அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமனா துணைத் தலைவர் சலாவுதீன் அயூப் கூறினார்.

சுகாதார அமைச்சகம் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் (என்.எஸ்.சி) இடர் மதிப்பீடுகளுக்கு உட்பட்டு செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் படிப்படியாக மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்ததைத் தொடர்ந்து இந்த கோரிக்கையை அவர் முன்வைத்தார்.

தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு ஃபைசர்-பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பூசி மூலம் தடுப்பூசி போட அரசாங்கம் ஆரம்பத்தில் திட்டமிட்டது. ஆனால் பின்னர் இதய அழற்சியின் அரிதான ஆபத்து காரணமாக இந்தத் திட்டத்தை நிறுத்தியது. இப்போதைக்கு, அரசாங்கம் இளம் வயதினருக்கு அடிப்படை சுகாதார  தடுப்பூசியை மட்டுமே வழங்கி வருகிறது.

ஆனால் மற்ற மாணவர்களின் பாதுகாப்பை அமைச்சகம் எவ்வாறு உறுதி செய்யும்? சமீபத்தில் டெல்டா மாறுபாடு பரவியதைத் தொடர்ந்து, பல வழக்குகள் பதிவாகியுள்ளன. இது பள்ளிகளுக்கு  மட்டுமான ஆபத்து அல்ல  பெற்றோர்கள், பேருந்து ஓட்டுநர்கள், கேன்டீன்களில் உணவு வழங்கவோர் என  பலர்  பள்ளி சூழலில் இருக்கின்றனர் என்று சலாவுதீன் (மேலே) நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி போடப்பட்ட மாணவர்கள் மற்றும் துணை ஊழியர்களின் தகவல்களை வெளியிடுமாறு அவர் கல்வி அமைச்சகத்திடம் கேட்டுக்கொண்டார். தெளிவான நிலையான இயக்க நடைமுறை (எஸ்ஓபி) இல்லாமல், கல்வி தொடர்பான கோவிட் -19 கிளஸ்டர்களின் அளவு அதிகரிக்கக் கூடும் என்று சலாவுதீன் எச்சரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here