இந்தியா செல்லும் அனைத்துலகப் பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை இனி இல்லை

புதுடெல்லி:

இந்திய அரசின் கோவிட்-19 வழிகாட்டி நெறிமுறைகளை மேலும் எளிதாக்கும் நோக்கில் அனைத்துலகப் பயணிகளுக்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

“கோவிட்- 19 பரவல் தடுப்பிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டதிலும் உலக அளவில் எட்டப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க அடைவைக் கருத்தில்கொண்டும் அனைத்துலகப் பயணிகளுக்கான கோவிட்-19 வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேலும் எளிதாக்குகிறது.

“இந்தப் புதிய நெறிமுறைகள் வியாழக்கிழமை அமலுக்கு வருகின்றன. இதன்படி, இந்தியாவுக்கு வரும் அனைத்துலகப் பயணிகளிடையே மேற்கொள்ளப்பட்டு வந்த ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கைவிடப்படுகிறது,” என்று மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரத்தில், கோவிட்-19 காலகட்டத்தில் விமான நிறுவனங்கள், உலகப் பயணிகள் பின்பற்ற வேண்டி இருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here