பெஜுவாங் கட்சி மாநிலத் தேர்தலில் போட்டியிடாது என்கிறார் முக்ரிஸ்

அடுத்த மாதம் நடைபெறும் மாநிலத் தேர்தலில் பெஜுவாங் கட்சி (Pejuang) எந்த வேட்பாளர்களையும் நிறுத்தாது என்று, அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் தெரிவித்தார்.

அதற்கு பதிலாக, 16வது பொதுத் தேர்தலுக்கு (GE16) தயாராவதற்காக தமது கட்சி இந்த வாய்ப்பைப் பயன்படுத்தும் என்றார்.

“மலாய் வாக்குகள் பிரிந்துவிடக் கூடாது, அதே நேரத்தில், இந்தாண்டு ஜனவரி முதல், கூட்டணியில் சேரும் எண்ணம் குறித்து பெரிகாத்தான் நேஷனலிடமிருந்து (PN) எங்களுக்கு எந்தப் பதிலும் வரவில்லை என்ற அடிப்படையில், பெஜுவாங் மாநிலத் தேர்தலில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளது என்றார்.

மேலும் “இந்த முடிவு காரணமாக பெஜுவாங் கட்சியினர் தேர்தலை எதிர்கொள்ள பயப்படுகிறார் என்று அர்த்தமல்ல. இது ந்த முடிவு தேர்தலில் நமது கட்சி பின்வாங்குவதாக நினைக்கக்கூடாது. நாம் நன்மைக்காகவே பின்வாங்குகிறோம். மாறாக, இதற்குப் பிறகு நாங்கள் முன்னேறுவோம்” என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here