கோலாலம்பூர், ஜூலை 26-
தேசியக் கூட்டணியைப் பச்சை அலை என நடப்பு அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகள் கூறுவது அச்சுறுத்தலாகும். இந்த அச்சுறுத்தலை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என தேசியக் கூட்டணியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கேட்டுக்கொண்டார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் தேசியக் கூட்டணிக்கான மக்கள் ஆதரவை தடுக்கும் நோக்கில் இந்தப் பொய்த் தகவலை அவர்கள் பரப்பி வருகின்றனர். பச்சை அலையைக் கண்டு மக்கள் பயப்பட வேண்டாம். வாக்காளர்களைக் குழப்புவதற்குச் சிலர் முன்னெடுக்கும் தந்திரங்களுள் இதுவும் ஒன்று. அனைத்து மலேசியர்களுக்கான கொள்கையைச் செயல்படுத்த பெரிக்காத்தான் நேஷனல் உறுதிபூண்டுள்ளது எனவும் சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி பெசாருமான அஸ்மின் அலி குறிப்பிட்டார்.




















