உலகில் பல்வேறு அதிசயங்கள் நிறைந்திருக்கிறது. அறிவியல் ஆராய்சிகளின் போது வெளிப்படும் ஒவ்வொரு தகவல்களும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இத்தகைய விந்தையான பூமி இன்னும் தனக்குள் கோடிக்கணக்கான அதிசயங்களையும் ஆச்சர்யங்களையும் உள்ளடக்கியுள்ளது. இப்படி அதிசயங்கள் நிறைந்த இந்த பூமி குறித்து நமக்கு பல சந்தேகங்கள் எழும்.
உலகின் மிகப்பெரிய நாடாக ரஷ்யா கருதப்படுகிறது. முழு ஆசிய கண்டத்திலே மிகப்பெரிய நாடு என்னும் சிறப்பை பெற்றுள்ளது ரஷ்யா. இது 1,70,98,242 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் – 1,63, 77,742 சதுர கிலோமீட்டர் நிலம் மற்றும் 7,20,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவு தண்ணீராக உள்ளது. பூமியில் மிகவும் பழமையான மக்கள் வசிக்கும் நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று என்றும் அதற்கான சான்றுகளை இன்றும் காணலாம் என்றும் கூறப்படுகிறது.
ரஷ்யாவின் இடைக்கால அரசு 9 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. பூமியின் மொத்த நிலத்தில் 10ல் ஒரு பங்கை ரஷ்யா தன்வசம் வைத்துள்ளது. ரஷ்யாவில் அதிகாரப்பூர்வ மற்றும் முக்கியமாக பேசப்படும் மொழி ரஷ்ய மொழியாகும். இது ஐரோப்பாவில் அதிகம் பேசப்படும் தாய்மொழியாகும். ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழி ரஷ்ய மொழியாகும். இது ஐக்கிய நாடுகள் சபையின் 6 அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.























