MYAirline ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட 533 SIP விண்ணப்பங்களில் 277 அங்கீகரிக்கப்பட்டுள்ளன

புத்ராஜெயா:

டைநிறுத்தப்பட்ட குறைந்த கட்டண விமான நிறுவனமான MYAirline Sdn Bhd (MYAirline) இன் மொத்தம் 533 ஊழியர்கள் சமூக பாதுகாப்பு அமைப்பின் (Perkeso) கீழ் வேலைவாய்ப்பு காப்பீட்டு திட்டத்தின் (SIP) கீழ் பலன்களைப் பெற விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

அந்த எண்ணிக்கையில் இதுவரை 277 விண்ணப்பங்களுக்கு Perkeso ஒப்புதல் அளித்துள்ளதாக மனிதவளத்துறை அமைச்சர் வி.சிவக்குமார் தெரிவித்தார்.

MYAirline ஊழியர்களின் சேவை ஒப்பந்தநிலையில் இருந்தபோதிலும் அவர்களது உரிமைகள் ஒடுக்கப்படாமல் இருப்பதை தனது அமைச்சகம் உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.

“மேலும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான கடிதங்கள் மற்றும் தேவையான பல ஆவணங்களை கொண்டுள்ளனரா என்பதைக் கண்டறியும் பணியில் PERKESO ஈடுபட்டுள்ளதாக” அவர் இன்று PERKESO Run&Ride 2023 இல் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் கூறினார்.

வேலை இழந்த தொழிலாளர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வரை SIP நிதி உதவி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here