தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்ட அரசியல்வாதி

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் நர்சிபட்டினம் நகராட்சி அமைந்துள்ளது. நர்சிபட்டினம் நகராட்சியின் நகராட்சி மன்ற உறுப்பினராக தெலுங்கு தேசம் கட்சியின் முலபர்த்தி ராமராஜு இருந்து வருகிறார்.

தேர்தலின்போது, நகராட்சியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வசதி, தரமான சாலைகள், கழிவுநீர் வடிகால்கள் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து இருந்தார். 

அவர் கேட்ட திட்டங்களுக்கு அரசு நிதி வழங்கவில்லை. இதற்கிடையே 31 மாதங்கள் சென்றுவிட்டன.

அவரால் தனது தொகுதிக்கு தான் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியவில்லை. 

இந்த நிலையில், திங்கட்கிழமை நகரசபைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது ராமராஜு எழுந்து, என்னை நம்பிய மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என ஆதங்கத்துடன் கூறி அவர், திடீரென தான் அணிந்திருந்த செருப்பை எடுத்து தன்னைத்தானே சரமாரியாக அடித்துக் கொண்டார்.

அதன்பின் கூட்டத்தில் இருந்து அழுதபடியே வெளியேறினார். அந்தச் சம்பவம் அவ்வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here