வாக்குப்பதிவான நாளை 3 மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு

கோலாலம்பூர்: ஆறு மாநில தேர்தல்களுக்கு வாக்குப்பதிவு நாளான நாளை காலை பினாங்கு, நெகிரி செம்பிலான் மற்றும் சிலாங்கூரில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும், மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) இணையதளத்தின்படி, கெடாவில் உள்ள பல கடலோரப் பகுதிகளும் இதேபோன்ற வானிலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தெரெங்கானுவில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் கிளந்தனில்  வானம் தெளிவாக இருக்கும்.

பிற்பகலில், பினாங்கு, சிலாங்கூர் மற்றும் கெடாவில் ஓரிரு இடங்களிலும், நெகிரி செம்பிலானின் உள்பகுதிகளிலும், கிளந்தான் மற்றும் தெரெங்கானுவில் பல இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

நாளை வெப்பநிலை 23 முதல் 34 செல்சியஸ் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆறு மாநிலங்களில் மொத்தம் 9.67 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, ஆறு மாநிலங்களில் உள்ள 245 மாநிலத் தொகுதிகளிலும் மொத்தம் 17,048 வாக்குச்சாவடி பெட்டிகளும் 3,190 வாக்குச்சாவடி மையங்களும் இயங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here