சிலாங்கூரில் PH-BN வெற்றி பெற்றால் திங்கட்கிழமை பொது விடுமுறை

 நாளை (ஆகஸ்ட் 12) நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான்-பாரிசான் நேஷனல் (PH-BN) வெற்றி பெற்றால், திங்கள்கிழமை பொது விடுமுறை அளிக்கப்படும் என்று பராமரிப்பு சிலாங்கூர் மந்திரி பெசார்  டத்தோஸ்ரீ அமிருதீன் ஷாரி தெரிவித்தார். நாங்கள் சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்று மாநில அரசாங்கத்தை அமைத்தால், வரும் திங்கட்கிழமை ஆகஸ்ட் 14 ஆம் தேதியை முழு மாநிலத்திற்கும் பொது விடுமுறையாக அறிவிக்க ஒப்புக்கொள்கிறோம்” என்று சிலாங்கூர் PH தலைவர் கூறினார்.

எப்ஃஎம்டியின் கூற்றுபடி, மாநிலத் தேர்தலில் PH-BN வெற்றி பெற்றால், PH-BN அறிக்கையில் முன்மொழியப்பட்ட ஐந்து நடவடிக்கைகளை ஒற்றும் அரசாங்கம் செயல்படுத்தும் என்று அமிருதீன் கூறினார். ஆறு மாநிலங்களைச் சேர்ந்த மலேசியர்கள் நாளை வாக்களிக்க உள்ளனர்.

மேலும், மாநில அரசு கிராமங்களில் உள்ள வீடுகள் மற்றும் குறைந்த விலை வீடுகளுக்கான மதிப்பீட்டு வரியை தள்ளுபடி செய்யும் என்றும், மேலும் பெண்களுக்கு அவர்களின் குழந்தை பராமரிப்பு செலவைக் குறைக்க RM1,000 முதல் RM5,000 வரை விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, சிலாங்கூர் பல்கலைக்கழகங்களில் உள்ள 1,000 மாணவர்கள் தலா RM200 மதிப்புள்ள புத்தக பற்று சீட்டை பெறுவார்கள். அதே நேரத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து இமாம்கள், பிலால்கள் மற்றும் சியாக்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படும், அதே நேரத்தில் 500 விவசாயிகள், நெல் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் 1,000 ரிங்கிட்டை ஊக்கத்தொகையாக பெறுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here