FIDE உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறி பிரக்ஞானந்தா புதிய சாதனை

அசெர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் FIDE உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா புதிய சாதனை படைத்துள்ளார். அரையிறுதிப்போட்டியில் உலகின் 3ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி 18 வயதான பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

பரபரப்பான அரையிறுதிப் போட்டியின் முதல் இரண்டு சுற்றுக்களும் சமனில் முடிந்த நிலையில் 3ம் சுற்று போட்டி நடந்தது. டை பிரேக்கரில் 3.5 – 2.5 என்ற புள்ளிகள் முன்னிலையில் பிரக்ஞானந்தா உலகின் 3ம் நிலை வீரருக்கு அதிர்ச்சி அளித்தார்.

முன்னதாக விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலகக் கோப்பை செஸ் அரையிறுதிக்கு முன்னேறிய 2ம் இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றிருந்த நிலையில் தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here