இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டம்; மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி

லண்டன் :

இப்பருவத்தின் இங்கிலிஷ் பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் வெற்றி பெற்றுள்ளனர்.

ஓல்டு டிராப்போர்ட் அரங்கில் நடைபெற்ற இவ்வாட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் நோட்டிங்ஹாம் போரஸ் அணியை சந்தித்தனர்.

இதில் அசாத்திய திறமையை வெளிப்படுத்திய மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் நோட்டிங்ஹாம் போரஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர். இவ்வணியின் வெற்றிக்கு கிறிஸ்டியன் எரிக்சன், காஸ்மிரோ, புரூனோ பெர்னாண்டஸ் ஆகியோர் கோல்களை அடித்தனர்.

எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் புல்ஹாம் அணியுடன் சமநிலை கண்டனர்.

டோட்டன்ஹாம் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் ஏஎப்சி போர்னமௌத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here