உலகிலேயே அதிகம் தங்கம் வைத்திருக்கும் நாடுகள் எவை…எவை?

ஒரு நாட்டில் இருக்கும் தங்கம் கையிருப்பு அந்த நாட்டின் பொருளாதார சிறப்பின் அடையாளம் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். அந்தவகையில், உலகிலேயே அதிகமாக தங்கம் வைத்துள்ள நாடுகள் தொடர்பிலான பட்டியல் வெளியாகியுள்ளது.

தங்க கையிருப்பில் முதல் 10 நாடுகள் தங்கத்தை அதிகம் கையிருப்பில் வைத்திருக்கும் முதல் நாடு அமெரிக்கா. உலகிலேயே அதிகபட்சமாக 8,133 டன் தங்கத்தை அமெரிக்கா சேமித்து வைத்திருக்கிறது.

தங்கம் கையிருப்பில் ஐரோப்பிய நாடான ஜெர்மனி 2ஆவது இடத்தில் உள்ளது. அந்த நாட்டிடம் 3,355 டன் தங்கம் கையிருப்பில் இருக்கிறது. இந்த பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ள இத்தாலி 2,452 டன் தங்கத்தை கஜானாவில் வைத்துள்ளது.

ஐரோப்பிய நாடான பிரான்ஸ் பட்டியலில் 4ஆவது இடத்தை பிடித்துள்ளது. பிரான்சிடம் 2,437 டன் தங்கம் கையிருப்பில் இருக்கிறது. மதிப்புமிகு மஞ்சள் உலோகம் இருப்பின் அடிப்படையில் ரஷியா 5ஆவது இடத்தில் உள்ளது. அந்நாட்டிடம் 2,326 டன் தங்கம் உள்ளது.

ஆறாவது இடத்தை 2,068 டன் தங்க சேமிப்புடன் சீனா தன்வசமாக்கி இருக்கிறது. 1,040 டன் உடன் சுவிட்சர்லாந்து 7ஆவது இடத்தில் உள்ளது. எட்டாம் இடத்தில் ஜப்பான் 846 டன் தங்கம் உள்ளது. கடந்த மார்ச் மாத தகவலின் படி இந்தியாவிடம் 795 டன் தங்கம் கையிருப்பில் இருக்கிறது.

இதனால் அதிகம் தங்கம் வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் 9 இடத்தை இந்தியா பிடித்துள்ளது. பத்தாவது இடத்தில் நெதர்லாந்து உள்ளது. அந்நாட்டிடம் 612 டன் அளவு தங்கம் கையிருப்பில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here