தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி ந. வளர்மதி காலமானார்

ராக்கெட் கவுண்டவுனுக்கு குரல் கொடுத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ ந.விஞ்ஞானி காலமானார். ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுண்டவுனுக்கு குரல் கொடுத்து வந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி ந.வளர்மதி(64). இவர் மாரடைப்பு காரணமாக நேற்றிரவு காலமானார்.

2012ல் விண்ணில் ஏவப்பட்ட ரிசாட் 1 திட்ட இயக்குனராகவும் பணியாற்றினார். கடைசியாக சந்திரயான் 3 கவுண்டவுனுக்கும் வளர்மதி குரல் கொடுத்துள்ளார். குடியரசு முன்னாள் தலைவர் மறைந்த அப்துல் கலாம் நினைவாக தமிழக அரசு நிறுவிய கலாம் விருதை, 2015-இல் முதல்முறையாக பெற்றவர் வளர்மதி என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here