அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்க “கோல்டன் விசா” வழங்கும் இந்தோனேசியா

ஜகார்த்தா:

ந்தோனேசியா அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்க “கோல்டன் விசா” (golden visa) திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

தேசியப் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் அத்திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாக இந்தோனேசியாவின் சட்டம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“கோல்டன் விசா” திட்டத்தின் கீழ் ஒருவர் இந்தோனேசியாவில் 5 முதல் 10 ஆண்டுகள் வரை வசிக்க முடியும்.

5 ஆண்டுகள் விசா அனுமதி பெறுவதற்கு முதலீட்டாளர்கள் 2.5 மில்லியன் டாலர் பெறுமானமுள்ள நிறுவனத்தைத் தொடங்க வேண்டும். அதேநேரத்தில் 10 ஆண்டுகள் விசா அனுமதி பெற 5 மில்லியன் டாலர் முதலீடு செய்ய வேண்டும்.

இத்தகைய விசாவை அமெரிக்கா, அயர்லந்து, நியூசிலந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளும் அறிமுகப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here