ஜோகூர் பாரு:
பெர்சாத்து கட்சியிலிருந்து விலகிய லார்கின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் இசார் அகமட் நேற்று இரவு அமானா கட்சியில் இணைவதாக அறிவித்தார்.
நேற்றிரவு தாமான் ரிக்ரியேஷன் பார்க் உடா உத்தாமாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்துகொண்ட, மெகா ஃப்யூஷன் மதானி நிகழ்வின்போது அவர் தனது உறுப்பினர் படிவத்தை அமானா தலைவர் டத்தோஸ்ரீ முகமட் சாபுவிடம் வழங்கினார்.
முன்னாள் ஜோகூர் முதலீடு, தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு மற்றும் மனிதவளக் குழுவின் தலைவராக இருந்த முகமட் இசார், பெர்சாத்து தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினிடம் நம்பிக்கை இழந்துவிட்டதாகக் கூறினார்.
சனிக்கிழமை இரவு, முன்னாள் புக்கிட் பாசீர் பாஸ் சட்டமன்ற உறுப்பினர் நஜிப் லெப்பும் அமானா கட்சியில் இணைவதாக அறிவித்தார் என்பது நினைவுகூறத்தக்கது.




















