சபாவில் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த அரசியல் ஸ்திரத்தன்மை, ஒற்றுமை தேவை என்கிறார் பேரரசர்

கோத்தா கினாபாலு:

மாநிலத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்ய சபாவிற்கு அரசியல் ஸ்திரத்தன்மையும், மக்களிடையே வலுவான ஒற்றுமையும் தேவை என்று மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் நடந்த ‘‘Kembara Kenali Borneo’ நிகழ்ச்சியின் போது பேசிய மாமன்னர் , சபா மக்களின் குறைகளைக் கேட்டேன், நிச்சயமாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை நான் சந்திக்கும் போது, சபாவின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்தையும் வலியுறுத்த விரும்கிறேன்,” என்று கூறினார்.

அந்நிகழ்வில் பேரரசியாரும் கலந்துகொண்டார்.

மேலும் சபா ஆடசியாளர், துன் ஜுஹார் மஹிருடின், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப், சபா முதல்வர் டத்தோஸ்ரீ ஹாஜி நூர் மற்றும் சபா மாநில சட்டமன்றத் தலைவர் டத்தோஸ்ரீ காட்ஜிம் ஹாஜி எம் யாஹ்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here