ஜோகூர் பூலாய் – சிம்பாங் ஜெராம் தொகுதியில் பச்சை அலை இல்லை

ஜோகூர் பாரு: பூலாய் மற்றும் சிம்பாங் ஜெராமில்  “பச்சை அலை” இல்லை, “சிவப்பு மற்றும் நீலம்” மட்டுமே என்பதை நாட்டின் மற்ற பகுதிகளுக்குக் காட்டியுள்ளனர் என்று தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம்மி புவா வீ சே கூறுகிறார்.

இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றது. 3R (இனம், மதம் மற்றும் அரச நிறுவனம்) பிரச்சினைகளை முன்வைத்து விளையாடுபவர்களுக்கு ஜோகூர் இடம் இல்லை என்பதற்கான வலுவான செய்தி என்று பூலாய் பிகேஆர் பிரிவு தலைவர் கூறினார்.

“ஜோகூர் ‘tetap’ ஜோகூர். (ஜோகூர் இன்னும் ஜோகூர்)

“இங்கு ‘பச்சை அலை’ இல்லை. ஏனென்றால் சிவப்பு மற்றும் நீல கோட்டை அதைத் தடுக்கிறது  என்று சனிக்கிழமை (செப்டம்பர் 9) இங்குள்ள தாமான் டாலியாவில் உள்ள பக்காத்தானின் ஆதரவாளர்கள் முகாமில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் புவா கூறினார்.

நீலம் மற்றும் சிவப்பு ஆகியவை மாநிலக் கொடியின் நிறங்களாக இருப்பதால், ஜோகூர் என்ற பெயருக்கு ஒத்ததாக இருந்தது. இது  மிதமான மலேசியாவிற்கு கிடைத்த வெற்றி என்று அவர் மேலும் கூறினார். ஜோகூரில் உள்ள பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் மாநிலத் தொகுதி ஆகிய இரண்டிலும் பக்காத்தான் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜோகூர் மாநில முன்னாள் சபாநாயகர் சுஹாய்ஸான் கயாட் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் 18,641 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

அவர் 48,283 வாக்குகளைப் பெற்றபோது, ​​அவரது எதிரிகள்; பெரிக்காத்தான் நேஷனலின் சுல்கிப்ளி ஜாபர்  29,642 வாக்குகள்; மற்றும் சுயேச்சையான சம்சுதீன் மொஹமட் பௌசி 528 வாக்குகளைப் பெற்றுள்ளார். சிம்பாங் ஜெராமில், பக்காத்தான் வேட்பாளர் நஸ்ரி அப்துல் ரஹ்மான் 3,514 பெரும்பான்மையுடன் இடைத்தேர்தலில் உள்ளார்.

நஸ்ரி 13,844 வாக்குகளையும், பெரிக்காத்தான் நேஷனலின் டாக்டர் முகமட் மஸ்ரி யாஹ்யா 10,330 வாக்குகளையும், சுயேச்சை வேட்பாளர் எஸ். ஜெகநாதன் 311 வாக்குகளையும் பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here