கோலாலம்பூர் :
“போர்னியோவை அறிவோம் (Kembara Kenali Borneo tour) ” என்ற அடிப்படையில் மாட்சிமை தங்கிய பேரரசர் அல் சுல்தான், சுல்தான் அப்துல்லா ரியாதுதீன், அவரது துணைவியார் பேரரசியார் துங்கு அஸிசா அமினா ஆகியோன் சபா, சரவா மாநிலங்களுக்கு சிறப்பு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சபாவுக்கான பயணம் முடிந்த நிலையில் அவர்கள் தற்போது சரவாக்கில் பயணம் மேற்கொண்டுள்ளதுடன் அங்கு நடைபெறும் பல நிகழ்வுகளில் அவர்கள் கலந்து கொண்டு, மக்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் அனைவரும் இணக்கத்துடனும் அமைதியுடனும் வாழுங்கள், மேலும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறும், அவ்வாறு இருந்தால்தான் நாட்டை வளர்ச்சி மற்றும் முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்ல எளிதாக இருக்கும்” என்று பேரரசர் கூறினார்.
“நான் அரசியல் பற்றி பேச விரும்பவில்லை. நான் அன்பைப் பற்றி மட்டுமே பேச விரும்புகிறேன். சபாஹான்கள், சரவாக்கியர்கள் மற்றும் அனைவருக்கும் நான் அரசன். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று மாமன்னர் தெரிவித்தார்.
இந்நிலையில் பேரரசர் தம்பதிகளுக்கு வழி நெடுகிலும் மக்கள் கூடிநின்று வரவேற்பளித்தும், நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தியும் வருகின்றனர்.