ரொபோட்டிக்ஸ் போட்டிகள் மூலம் மாணவர்களிடையே புத்தாக்க ஆர்வத்தைத் தூண்ட முடியும்

பத்துபகாட்,

ஸ்டெம் (STEM) எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் கல்வியில் மாணவர்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் 7 வயது முதல் 19 வயது வரையிலான ஆரம்பப்பள்ளி, இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு தேசிய ரொபோட்டிக்ஸ் போட்டி நடத்தப்பட்டது.

கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி பத்துபகாட்டில் டேவான் சுல்தான் இப்ராஹிம் துன் ஹுசேன் ஓன் பல்கலைக்கழகத்தில் இதன் நிறைவு விழா நடைபெற்றது. இணைபாட நடவடிக்கையாக சஸ்பாடி ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் ஒத்துழைப்புடன் கல்வி அமைச்சு இப்போட்டியை நடத்தியது. கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை துன் ஹுசேன் ஓன் பல்கலைக்கழகத்தில் இப்போட்டி நடத்தப்பட்டது. நவம்பர் 7 முதல் நவம்பர் 9 வரை பனாமா சிட்டியில் 2023 அனைத்துலக ரொபோட் டிக்ஸ் இறுதிப் போட்டியில் 7 சிறந்த குழுக்களைத் தேர்வு செய்வதற்காக இப்போட்டி நடத்தப்பட்டது.

பத்து பகாட் டத்தோஹுசேன் ஓன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய ரொபோட்டிக்ஸ் இறுதிச் சுற்றுப் போட்டியில் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் கலந்து கொண்டார். மேலும் ஒரு குழுவாக இணைந்து புத்தாக்கச் சிந்தனையில் புதிய கண்டுபிடிப்புகளைப் படைப்பதற்கு ஓர் உந்துசக்தியாகவும் விளங்குகிறது என்று கல்வி அமைச்சர் தமதுரையில் குறிப்பிட்டார். ஒவ்வொரு பள்ளியும் 3 பங்கேற்பாளர் களையும் அவர்களுக்கு வழிகாட்டுவதற்கு 2 ஆசிரியர்களையும் அனுப்பி வைத்தது.

ரோபோக்களை வடிவமைக்கவும் உருவாக்கவும் லெகோ (LEGO) கல்வித் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டது. 2023ஆம் ஆண்டு பட்ஜெட்டில் நாடு முழுவதும் உள்ள 320 பள்ளிகளுக்கு ரொபோட்டிக்ஸ் மேலும் ஸ்டெம் கல்விக்கு மத்திய ஒற்றுமை அர சாங்கம் 5.8 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியது. தேசிய அளவிலான வெற்றியாளர்கள் நவம்பர் 7 முதல் நவம்பர் 9ஆம் தேதி வரை பனாமா நகரில் நடைபெறும் 2023 இருப தாவது உலோக ரொபோ ஒலிம்பியாட் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்துப்
பங்கேற்பார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here