கோலாலம்பூர்:
கோலாலம்பூர் சைனீஸ் அசெம்பிளி ஹால் பேரவையின் KLCAH மகளிர் பிரிவு ஏற்பாட்டில் நடைபெற்ற பாமேரான் செனி அமால் இம்பியான் 2023 கண்காட்சியில் 1லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் திரட்டப்பட்டது.
ஆர்ட்டிவோ கிரியேட்டிவ் அகாடமி ஒத்துழைப்புடன் 2023 செப்டம்பர் 8ஆம் தேதி முதல் 2023 செப்டம்பர் 14ஆம் தேதி வரை பெவிலியன் புக்கிட் ஜாலில் ஸோன் ஆரஞ்சில் இக்கண்காட்சி காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெறுகிறது.
2023 செப்டம்பர் 9ஆம் தேதி செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் இக்கண்காட்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
பேராக் மாநிலத்தில் உள்ள 15 ஆதரவற்ற சிறார் இல்லங்கள், ஓராங் அஸ்லி பிள்ளைகளுக்கு இந்த நிதி பகிர்ந்து அளிக்கப்படும்.
இந்த ஒரே நிதி திரட்டும் நிகழ்ச்சியில் 4,280 கொடையாளர்கள் நன்கொடை வழங்கியிருப்பதை அங்கீகரித்து கோலாலம்பூர் சைனீஸ் அசெம்பிளி ஹால் பேரவைக்கு மலேசிய சாதனைச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெறுவதற்கு அரும்பாடுபட்ட அனைத்து தரப்பினருக்கும் KLCAH தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சாய் கீ கான் நன்றி தெரிவித்தார்.
இக்கண்காட்சியை மிக நேர்த்தியாகவும் ஆக்கப்பூர்வமாகவும் ஏற்பாடு செய்த KLCAH மகளிர் பிரிவு தலைவர் டத்தோ அடா யூன் யின் ஹூவ், ஏற்பாட்டுக் குழுத் தலைவி டத்தின் அய்ன்ஸ் லே தியூ ஸீ சின், நன்கொடையாளர்கள் அனைவருக்கும் டத்தோஸ்ரீ டாக்டர் சாய் கீ கான் நன்றி பாராட்டினார்.
3 வயது சிறார்கள் முதல் 20 வயது இளைஞர்கள் வரையிலானவர்களின் கை வண்ணங்களில் உருமான 600 ஓவியங்கள் கண்காட்சியில் இடம்பெற்றன.