ஜோகூர் பாரு:
கம்போங் வாடி ஹனாவிலுள்ள ஜாலான் சென்யூம் பகுதியில் உள்ள கடைவீட்டுத் தொகுதி இன்று புதன்கிழமை (செப்டம்பர் 13) அதிகாலை தீப்பிடித்து எரிந்ததில் மூன்று குழந்தைகளின் தாய் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
அதிகாலை 4.53 மணிக்கு தீ விபத்து குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக லார்கின் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய செயல்பாட்டுத் தளபதி முகமட் ஃபைஸ் சுலைமான் தெரிவித்தார்.
உடனடியாக லார்கின், தெப்ராவ், ஜோகூர் ஜெயா மற்றும் கெம்பாஸ் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 49 பேர் கொண்ட தீயணைப்பு மற்றும் மீட்பு குழு அவ்விடத்திற்கு விரைந்தது .
முகமட் ஃபைஸ் மேலும் கூறுகையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ஒரே கடை வரிசையில் உள்ள மூன்று இரட்டை மாடி கடைகளில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது.
“இந்நிலையில் எரியும் அறை ஒன்றில் சிக்கியிருந்த நான்கு பேர் கொண்ட குடும்பத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்டு உடனடியாக சுல்தானா அமினா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அவர்கள் தீயின் புகையை சுவாசித்ததால் மூச்சுத் திணறலால் அவதியுற்றனர் ,” என்று அவர் மேலும் கூறினார்.
எவ்வாறாயினும், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான 53 வயதுடைய பெண் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்ததாக மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியால் இறந்ததாக அறிவித்தார், மேலும் அவரது மூன்று பிள்ளைகள், 21 வயது ஆண், 18 வயது ஆண் மற்றும் 7 வயது சிறுமி ஆகியோர் நலமாக உள்ளனர் என்றார் அவர்.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் மதிப்பிடப்பட்ட இழப்பு இன்னும் விசாரணையில் உள்ளது.
இதற்கிடையில், , சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வெளிநாட்டினர் என்பதை ஜோகூர் பாரு தெற்கு OCPD துணை ஆணையர் ரவூப் செலாமாட் உறுதிப்படுத்தினார்.























